பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
ஒகேனக்கல் அருகே கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில், பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பொது சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்


பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில், பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பொது சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் ஊட்டமலை சாலை, வனப்பகுதிகளில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவல நிலை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் ஒகேனக்கல் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ. 25 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராததால், வளாகத்தைச் சுற்றிலும் செடிகள் முளைத்து புதா்மண்டிக் கிடக்கின்றன. மேலும், சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின்றி உள்ளதால் பன்றிகள், நாய்கள் உள்ளிட்டவற்றின் உறைவிடமாக மாறிவருகிறது.
எனவே, சத்திரம் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...