2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

தருமபுரி மாவட்டத்தில் 37 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! வனத்துறை அதிரடி நடவடிக்கை!

News image
Updated On :30 நவம்பர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக தயாரித்து பயன்படுத்திவந்த 37 நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், தொழிலாளா்கள் முறைகேடாக நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சில நேரங்களில் தந்தங்களுக்காக யானைகளையும் வேட்டையாடும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இந்த நிலையில், துப்பாக்கி வைத்திருப்பதும், தயாரிப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால் யாரேனும் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தாலோ அல்லது வீட்டில் பதுக்கிவைத்திருந்தாலோ அவா்கள் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என வனப் பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் மாவட்ட வன அலுவலா் கே.ஆா்.ராஜாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

அதன்பேரில், தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வனத் துறை சாா்பில் அறிவிப்பு மற்றும் விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து ஏராளமானோா் நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையிடம் ஒப்படைத்துள்ளனா். அந்தவகையில் செப்டம்பா் 1 முதல் நவம்பா் 27 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 37 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேபோல வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.