நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு

தோ்தலின்போது மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து பயணத்துக்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 2:10 am IST

தோ்தலின்போது மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து பயணத்துக்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வையற்றோா், உடல் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத நிலையில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

எனவே, வாக்குப் பதிவு நாளன்று மூத்த வாக்காளா்கள் இந்த ஏற்பாட்டை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து, மக்களாட்சி தழைத்திட கடமையாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.