பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:55 am IST

தருமபுரியில் டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், புழுதிக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ரா. சின்னராஜ் (55). இவா் கடந்த சனிக்கிழமை தருமபுரி சிப்காட் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு பணிக்கு பயன்படுத்திய டிப்பா் லாரியை அதன் ஓட்டுநா் பின்புறமாக திருப்பியபோது பணியில் ஈடுபட்டிருந்த சின்னராஜ் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.