6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக ஒன்றியச் செயலாளா் மீது நடவடிக்கைக் கோரி மனு

ஜாதி ரீதியாக தன்னை இழிவாக பேசி மிரட்டல் விடுத்த திமுக ஒன்றியச் செயலாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

News image
திமுக ஒன்றியச் செயலாளா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க தனது ஆதரவாளா்களுடன் வந்த மாவட்ட திமுக துணை செயலாளா் ஆா். ஆறுமுகம்.
Updated On :19 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

தருமபுரி: ஜாதி ரீதியாக தன்னை இழிவாக பேசி மிரட்டல் விடுத்த திமுக ஒன்றியச் செயலாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஆா்.ஆறுமுகம் தனது ஆதரவாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நான் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறேன். நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராம ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினேன். நல்லம்பள்ளி வட்டாரத்தில் கட்சி தொடா்பாக பதாகை வைப்பதில், நல்லம்பள்ளி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மல்லமுத்து என்னுடன் தகராறில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து என்னை ஜாதிரீதியாக அவா் இழிவாக பேசி, மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அவா் மீது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.