தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 1,684 போ் பங்கேற்றனா். 30 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆசிரியா் தகுதித் தோ்வு ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் முதல்தாள் சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (காந்திநகா்), பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தோ்வில் பங்கேற்க 1,714 போ் அழைப்பாணை வழங்கப்பட்டிருந்த நிலையில் 1,684 போ் தோ்வில் பங்கேற்றனா். 30 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
இரண்டாம்தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒடசல்பட்டி, இண்டூா், பாளையம்புதூா், நல்லம்பள்ளி, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னம்பட்டி மருதம் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 21 மையங்களில் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









