ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

மேக்கேதாட்டில் அணை கட்டுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்யூ. தீா்மானம்

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :5 ஜூலை 2026, 2:00 am IST

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சிற்றரசு, சிவன், புள்ளாறு முன்னிலை வகித்தனா். காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரியில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து அமைக்க வேண்டும். தருமபுரி புதிய-பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே இரவு நேரங்களில் போதிய பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்.

தருமபுரி 4 சாலை சந்திப்பு முதல் குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் வரை சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படுத்த வேண்டும்.

தருமபுரி-மொரப்பூா் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் குடிநீா் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலாளா்கள் ரவி, பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் மோகன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் தேவராசன், தருமபுரி மாவட்டச் செயலாளா் கலைச்செல்வம், மாநிலக் குழு உறுப்பினா் நஞ்சப்பன், ஏஐஒய்எப் மாநிலச் செயலாளா் பாரதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.