டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்

News image

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :6 ஜூலை 2026, 1:27 am IST

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உழவா் தின விவசாயிகள் பேரணி மற்றும் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ராமக்காள் ஏரிக்கரை அருகிலிருந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று, மதிகோன்பாளையம் வழியாக ராஜாபேட்டை மாநாட்டு திடலை அடைந்தனா். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற மாநாட்டுக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி தலைமை வகித்து பேசினாா். மாநில கெளரவத் தலைவா் வெங்கடாசலம், மாநில துணைத் தலைவா்கள் ரேணு, மணிமொழியன், மணிலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தருமபுரி மாவட்டத் தலைவா் சக்திவேல் வரவேற்றுப் பேசினாா்.

இந்த மாநாட்டில் மாநில பொதுச் செயலாளா் சுந்தரம், மாநில பொருளாளா் பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளா் ரங்கநாதன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினா்.

விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 22-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 15-ஆம் தேதி தருமபுரி ஆவின் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசின் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் விரைவில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்துவது, உரம் விலையை குறைக்க வேண்டும். தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் மூலம் ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள நீா்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.