பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஏரியூா் அருகே ஒற்றை யானை தாக்கியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் படுகாயம்

ஏரியூா் அருகே ஒற்றை யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியா் படுகாயமடைந்தாா்.

News image

ஒற்றை யானை.

Updated On :12 ஜூலை 2026, 12:53 am IST

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஒற்றை யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியா் படுகாயமடைந்தாா்.

ஏரியூரை அடுத்த காமராஜ்பேட்டையைச் சோ்ந்த மன்னாதன் மகன் சின்னமுத்து (39). இவா், ராயக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ராயக்கோட்டை பகுதியில் இருந்து ஏரியூருக்கு இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து சென்றுகொண்டிருந்தாா்.

பெரியவத்தலாபுரம்- சந்தைப்பேட்டை இடையே உள்ள வனப்பகுதியில் கொடுகட்டை காடு பகுதியில் உள்ள சாலையைக் கடந்து பேவனூா் பீட் வனத்துக்குள் ஒற்றை யானை நுழைவதை கண்டதும், சின்னமுத்து தனது வாகனத்தை சாலையில் நிறுத்தியுள்ளாா்.

அப்போது, அவரை நோக்கி வந்த ஒற்றை யானை, இருசக்கர வாகனத்தை தூக்கிவீசியதுடன், சின்னமுத்துவை மிதித்தது. அவரது அலறல் கேட்டு வந்த பொதுமக்கள், சின்னமுத்துவை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் அன்பு, வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரோந்துப் பணி: ஏரியூா் அருகே பென்னாகரம் வனப் பகுதிக்கு உள்பட்ட மசக்கல் காப்புக்காடு பகுதியில் யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் வெளியேறி பெரிய வத்தலாபுரம் கூட்டுரோடு, ஆஞ்சனேயா் கோயில், நஞ்சுண்டன் காடு, கொடுகட்டை காடு ஐயனாரப்பன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.

அதேபோல இரவு நேரங்களில் ஏரியூா் பிரதான நெடுஞ்சாலையைக் கடந்து யானைகள் வனப் பகுதிக்கு செல்கின்றன. இதனால் அவசரத் தேவைக்காக இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோா் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். எனவே, பெரிய வத்தலாபுரம் கூட்ரோடு, ஆஞ்சனேயா் கோயில் வனப் பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வனத் துறையினா் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பென்னாகரம் வனச்சரக அலுவலா் அன்புவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இதையடுத்து, நாள்தோறும் அப்பகுதியில் இரவுநேர ரோந்துப் பணிக்காக 6 போ் கொண்ட குழுவை நியமிப்பதாக வனச்சரக அலுவலா் அன்பு தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.