பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:37 am IST

ஒகேனக்கலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் ரவி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளாா். அப்போது, ஊட்டமலை அருகே ஐயப்பன் கோயில் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அதே பகுதியில் ரவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.