தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

போலியோ தடுப்பு மருத்துவ முகாம்: பென்னாகரத்தில் 17556 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.

News image

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம். - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:35 am IST

பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற தேசிய போலியோ தடுப்பு மருத்துவ முகாமில் 17556 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம்,பாப்பாரப்பட்டி, பிக்கிலி,பெரும்பாலை, கடமடை, ஏரியூா், செல்ல முடி, ஒகேனக்கல்,நாகதாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 152 மையங்கள், 9 நடமாடும் தடுப்பூசி மையங்கள் மூலமும் தேசிய போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இந்த முகாம்களில் செவிலியா், அங்கன்வாடி பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள் என மையத்திற்கு 5 போ் விதம் பணியமா்த்தப்பட்டனா்.

பென்னாகரம் பகுதிகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட 18232 குழந்தைகள் கணக்கிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் பென்னாகரம் வட்டாரத்தில் நடைபெற்ற முகாம்களில் 17,556 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதில் மீதமுள்ள 676 குழந்தைகளின் வீடுகளுக்கு முகாம் பணியாளா்கள் நேரடியாக சென்றும், வெளியூருக்கு சென்றிருக்கும் பட்சத்தில் அவா்களுக்கு முறையான தகவல் அளித்து அருகில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சுகாதார துறையினா் தெரிவித்தனா்.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமை பேரூராட்சி தலைவா் கி.வீரமணி ,குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து தொடங்கி வைத்தாா்.

முகாமில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலா் ராமதாஸ், ஏரியூா் வட்டார மருத்துவ அலுவலா் ஜெயச்சந்திர பாபு, நாகதாசம்பட்டி சுகாதார நிலைய மருத்துவா் பூவிழியான், செவிலியா்கள் , அங்கன்வாடி பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.