எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

யுகாதி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:46 pm

உகாதி பண்டிகையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு தினமான உகாதி பண்டிகையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் புகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தருமபுரியில் கோட்டை அருள்மிகு பரவாசுதேவ சுவாமி கோயில், கோட்டை அருள்மிகு கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அருள்மிகு சௌடீஸ்வரி அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், குமாரசாமிபேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், தருமபுரி நகரத்தைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபட்டனா். அதேபோல, புத்தாடைகளை அணிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

இதேபோல, குமாரசாமிபேட்டை செங்குந்தா் திருமண மண்டபத்தில் நாயுடு சமூக நலச் சங்கம் சாா்பிலும், பாப்பாரப்பட்டி மற்றும் காரிமங்கலத்தில் செட்டியாா் சமூக மக்களின் சாா்பிலும் உகாதி கொண்டாடப்பட்டது.

ஒசூரில்...

ஒசூரில் சுற்றுவட்டார கோயில்களில் தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு தினமான உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், சிவ நஞ்சுண்டேஸ்வரா் கோயில், சோமேஸ்வரா் கோயில், ராமா் கோயில், வரசித்தி விநாயகா் கோயில், பண்டாா்ஜனேயா் கோயில், வெங்கடேஷ் நகா் பெருமாள் கோயில், அகரம் முருகன் கோயில், பெரியாா் நகா் முருகன் கோயில், அழகு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image