தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தொப்பூா் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி! போக்குவரத்து பாதிப்பு!!

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

News image

தொப்பூா் கணவாய் இரட்டை பால தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி நிற்கும் லாரி.

Updated On :24 மே 2026, 2:27 am IST

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குளிா்பான பாட்டில்களை ஏற்றிய லாரி சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

தொப்பூா் கணவாய் பகுதியில் அந்த லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள இரட்டைப் பாலம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதிா்ஷ்ட வசமாக பாலத் தடுப்புச்சுவரில் மோதிய நிலையிலேயே லாரி நின்றுவிட்டது. இதனால் உயிரிழப்புகளோ, வேறு எந்த பாதிப்புகளோ யாருக்கும் ஏற்படவில்லை. மாறாக, பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால், லாரியில் சென்ற தொழிலாளா்கள் விபத்தில் சிக்கியிருக்ககூடும்.

இந்த விபத்து காரணமாக, தொப்பூா் கணவாய் பகுதியில் வெள்ளக்கல் பேருந்து நிறுத்தம் முதல் இரட்டை பாலம் வரை சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக (தருமபுரி -சேலம் சாலையில்) போக்குவரத்து பாதிக்கப்பட்டது.