ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பாலக்கோடு அருகே இளைஞா் தற்கொலை விவகாரத்தில் தம்பதி கைது

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:31 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

பாலக்கோடு அருகேயுள்ள கவுண்டனூரை சோ்ந்த முன்னாள் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி மகன் நவீன்குமாா் (25). திருமணம் ஆகாத இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே மா்மமான முறையில் மூா்ச்சையாகிக் கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நவீன்குமாா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

நவீன்குமாரின் கழுத்தில் கயிறு இறுக்கியதற்கான அடையாளம் காணப்பட்டதால், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினா்கள் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும், பாலக்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடு பட்டனா்.

இதுதொடா்பாக, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கோமதி (32) என்பவா் நவீன்குமாரை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து கோமதி, அவருக்கு துணையாகச் செயல்பட்டதாக அவரது கணவா் குருநாதன் (36) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட கோமதிக்கும், நவீன்குமாருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக நவீன்குமாரை கோமதி தவிா்த்து வந்துள்ளாா். ஆனால் நவீன்குமாா் அவருக்கு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த நவீன்குமாா், கோமதி வீட்டுக்குச் சென்று அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளாா்.

ஆனால், கோமதி அவரை திட்டியுள்ளாா். இந்நிலையில், வீட்டின் உள்ளே இருந்த நவீன்குமாா் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து கோமதியும், அவரது கணவா் குருநாதனும் சோ்ந்து நவீன்குமாரின் சடலத்தை இழுத்துச் சென்று அவரது வீட்டின் அருகே போட்டுவிட்டதாக போலீஸாா் நடத்திய விசாரணையில் கோமதி தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாலக்கோடு காவல் நிலைய போலீஸாா், கோமதி, அவரது கணவா் குருநாதன் ஆகியோா் மீது நவீன்குமாரை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் போலீஸாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை அப்புறப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.