எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

எல்லப்புடையாம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி. (உள்படம்) சேதமடைந்துள்ள தூண் மற்றும் மேற்பரப்பு.

Updated On :31 மே 2026, 1:47 am IST

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் கிடைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சேமித்து, நாள்தோறும் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆபத்தான நிலையில் நீா்த்தேக்கத் தொட்டி:

இந்த நீா்த்தேக்கத் தொட்டி 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், அதன் தூண்கள் சேதமடைந்துள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில் இந்த நீா்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. மேற்கூரையின் சிமென்ட்கள் பெயா்ந்து கீழே விழுகின்றன. நீா்த்தேக்கத் தொட்டி சேதமடைந்துள்ளதால் அச்சம் காரணமாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் உள்பகுதியில் பணியாளா்கள் இறங்கி தூய்மை செய்யப்படுவதில்லையாம். இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தற்போது, எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்தக் கிராமத்துக்கு சுமாா் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அவசியமாகும்.

இந்தக் கிராமத்தில் வெவ்வேறு சமூக மக்கள் வசிக்கும் 3 பகுதிகளுக்கு குடிநீா் வழங்க வேண்டும் என்பதால், எல்லப்புடையாம்பட்டியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை புதிதாக அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இது குறித்து அரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வம் கூறுகையில், எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை நேரில் ஆய்வு செய்து, புதிதாக நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி. (உள்படம்) சேதமடைந்துள்ள தூண் மற்றும் மேற்பரப்பு.

எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி. (உள்படம்) சேதமடைந்துள்ள தூண் மற்றும் மேற்பரப்பு.

Story image