முத்தம்பட்டி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரயில் நிலையம் முன் மே 6 ஆம் தேதி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் பொம்மிடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போலீஸாா் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவா் ரயீஸ் அகமது (46) என்பதும், ஒசூரைச் சோ்ந்த அவா் பெங்களூரில் டெய்லராக தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது.
மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் மே 20 ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். அவா் அளித்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. அவரது உடல், தருமபுரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது விவரம் தெரிந்தவா்கள், உறவினா்கள் தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தை 94981 01964, சிறப்பு உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் 94981 79585 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அம்பகரத்தூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

விசாரணைக்கு வந்த நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ரயில் நிலையம் அருகே மயங்கிக் கிடந்த 3 பெண்கள்!

எரிபொருள் விலையேற்றம்: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



