11, 12-ல் சேலத்தில் மாவட்ட ஹாக்கி போட்டி
சேலம், ஜன. 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் வரும் 11, 12-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் லீக் போட்டிகளாக


சேலம், ஜன. 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் வரும் 11, 12-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.
நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் லீக் போட்டிகளாக நடைபெறும் இத் தொடரில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...