சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

நடுவர் மன்றத் தீர்ப்புப்படி, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

Published On :

நடுவர் மன்றத் தீர்ப்புப்படி, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரசார பேரியக்கம் செப்டம்பர்

11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து புறப்பட்ட பிரசாரக் குழு, ஞாயிற்றுக்கிழமை தருமபுரியை வந்தடைந்தது.

பின்னர், தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் முன் நடைபெற்ற பிரசார கூட்டத்தில்,

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொல்புதூர் தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து கால்வாய் மூலம் தருமபுரி பாலக்கோடு, மொரப்பூர், காரிமங்கலம், தருமபுரி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு உபரி நீரை பாசனத்திற்காக கொண்டு வர வேண்டும்.

தென்னக நதிகளை இணைக்க வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகத்திலிருந்து 192 டிஎம்சி காவிரி நீரை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, பென்னாகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ந.நஞ்சப்பன் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் எம்.லகுமய்யா, தருமபுரி மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் சி.தேவராஜன், மாவட்ட துணைச் செயலர் ஜெ.பிரதாபன், மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.பி.புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.