அரூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை

அரூரில் கொசு ஒழிப்புக்கான புகை மருந்துகள் அடிக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

அரூரில் கொசு ஒழிப்புக்கான புகை மருந்துகள் அடிக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்துகள் அடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக கூடுதலாக தாற்காலிக பணியாளர்கள் 20 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 அரூர் பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள், தாற்காலிக பணியாளர்கள் நகரின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றுதல், கழிவுநீர்க் கால்வாய் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதில், செயல் அலுவலர் மா.ராஜா ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார்,  சுகாதார ஆய்வாளர் என்.இளவரசன், மேற்பார்வையாளர் எம்.அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com