முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

"ஒகேனக்கல்லில் கடைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்திட வேண்டும்'

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடைகள் மற்றும் கழிப்பறைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்திட வேண்டும் என பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:20 am IST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடைகள் மற்றும் கழிப்பறைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்திட வேண்டும் என பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை: சுற்றுலாத் தலமான,  ஒகேனக்கலில் ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமாக பேருந்து நிலையம் மற்றும் 11 கடைகள், பூங்கா, பரிசல்துறை மற்றும் மீன் சந்தை ஆகிய இடங்களில் நவீன கழிப்பிடங்கள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் நேரடி நிர்வாகத்தின் கீழ்
உள்ளது.
இந்தக் கடைகள், பூங்கா, நவீன கழிப்பிடங்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வெளிப்படையாக வாடகை ஏலத்துக்கு விட வேண்டும். ஆனால், அவ்வாறு ஏலம் விடப்படாமல், ஏலம் நடைபெற்றதாக பதிவேடுகளில் பதிந்திட முயற்சி நடைபெற்று வருகிறது.  
இந்த 11 கடைகளுக்கு மார்ச் 6, 15, 22 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறுமென அறிவிப்பு வெளியிட்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன கழிப்பறைகளுக்கு மார்ச் 19, 22 ஆகிய இரண்டு தேதிகளில் ஏலம் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏலம் ஒத்தி வைத்ததற்கான காரணத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தின் தரப்பில் முறையாகத் தெரியப்படுத்தவில்லை.  எனவே, இக் கடைகள் மற்றும் கழிப்பறைகளுக்கான ஏலம், அனைவரும் பங்கேற்கும் வகையில் வெளிப்படையாக நடைபெற தருமபுரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.