விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், என்.எல்.சி. பள்ளி-நெய்வேலி, அரசு மேல்நிலைப் பள்ளி புதூர்-சென்னை, நாமக்கல் செல்வம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, மாணவியருக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளு தூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் நிகழாண்டுக்கான (2018-19) சேர்க்கைக்கு உரிய படிவங்களை தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகி இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகிற ஏப். 20- க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு

மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


