வரும் மக்களவை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வாக்குச்சாவடி குழுவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைத்து முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அக் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலர் பி.எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
வரும் மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற அதிமுகவினர் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி குழுவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை நியமித்து முனைப்போடு செயல்பட வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் அதிமுக வெற்றிபெற உறுதியோடு பணியாற்றுவோம் என்றார்.
கூட்டத்தில் தருமபுரிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை, பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் அமைக்க நிதி ஒதுக்கீடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உறுப்புக் கல்லூரிகளை, கலைக் கல்லூரிகளாக தரம் உயர்வு, பாலக்கோட்டுக்கு புதிய கல்லூரி மற்றும் ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









