டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அதிமுக வாக்குச்சாவடி குழுவைப் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுரை

வரும் மக்களவை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வாக்குச்சாவடி குழுவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைத்து முனைப்புடன்

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

வரும் மக்களவை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வாக்குச்சாவடி குழுவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைத்து முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர்  கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரி  மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அக் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலர் பி.எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: 
வரும் மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற அதிமுகவினர் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும்.  வாக்குச்சாவடி குழுவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை நியமித்து முனைப்போடு செயல்பட  வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் அதிமுக வெற்றிபெற உறுதியோடு பணியாற்றுவோம் என்றார். 
கூட்டத்தில் தருமபுரிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை,  பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் அமைக்க நிதி ஒதுக்கீடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உறுப்புக்  கல்லூரிகளை, கலைக் கல்லூரிகளாக தரம் உயர்வு, பாலக்கோட்டுக்கு புதிய கல்லூரி மற்றும் ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.