/

நீரின்றி அவதிப்படும் நோயாளிகள்...

காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகளில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகளில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் உள்ள மட்டநிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்று தண்ணீர் பெற்று வரும் அவல நிலை உள்ளது.அதேபோல, அங்கு தங்கியுள்ள செவிலியர்கள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.