தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரகில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து 361 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஊன்றுக் கோல்கள், காதொலிக் கருவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் இலவச சலவைப் பெட்டிகள், தையல் இயந்திரங்கள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர்கள் எச்.ரஹமத்துல்லா கான், துர்காமூர்த்தி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 275 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து எலும்பு நோய் சிகிச்சைக்காக மாணவி தீபிகாவுக்கு ரூ.10 ஆயிரம், மாணவர் நாசிப் என்பவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம், சிறுநீரக சிகிச்சைக்காக கீதா என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அப்போது பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







