உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

அரூரில் தொடங்கப்படவுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில்  மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆர்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
Updated on
1 min read

அரூரில் தொடங்கப்படவுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில்  மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆர்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,  2018-19-ஆம் கல்வி ஆண்டில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி  தொடங்கப்படவுள்ளது. இப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள், உணவு வசதிகள், கணினி பயிற்சி, தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். தாய், தந்தையை இழந்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், எஸ்.சி., எஸ்.டி, முஸ்லிம், துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினரின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்க்கப்படுவர்.  
பொதுமக்கள் அரூர் 4 வழிச்சாலையில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனவும் அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com