விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல் துறை சார்பில் இலவச இருதயப் பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்டக் காவல் துறை மற்றும் திருப்பூர் காமன் இண்டியன்ஸ், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் இலவச இருதயப் 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:38 am

DIN

தருமபுரி மாவட்டக் காவல் துறை மற்றும் திருப்பூர் காமன் இண்டியன்ஸ், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் இலவச இருதயப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது.
முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தொடங்கிவைத்தார். திருப்பூர் காமன் இண்டியன்ஸ் தலைவர் சேஷாத்திரி முன்னிலை வகித்தார். அப்பல்லோ மருத்துவமனை இருதய நிபுணர் முத்துக்குமார் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கு இருதயப் பரிசோதனை செய்துகொண்டனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
முகாமில், துணைக் காவல் கண்காணிப்பாளர் காந்தி, அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.