திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 94,608 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொகுதி 4 தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 57,957 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36,651 பேரும் எழுதினர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:02 am

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொகுதி 4 தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 57,957 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36,651 பேரும் எழுதினர்.
தருமபுரி மாவட்டத்தில் 66,357 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக தருமபுரி, அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளில் 169 மையங்களில் 234 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
8,400 பேர் தேர்வெழுத வரவில்லை. 57,957 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களைக் கண்காணிக்க 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. 234 கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் மகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி சார்பு செயலர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் -4 போட்டித் தேர்வை 36,651 பேர் எழுதினர்.
இத் தேர்வுக்கு மொத்தம் 43,638 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 7 வட்டங்களில் 138 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வை கண்காணிக்க 29 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 13,706 தேர்வர்களும், தேன்கனிக்கோட்டையில் 1,466 பேரும், ஒசூரில் 8,371 தேர்வர்களும், ஊத்தங்கரையில் 5,274 தேர்வர்களும், போச்சம்பள்ளியில் 5,041 தேர்வர்களும், சூளகிரியில் 766 தேர்வர்களும், பர்கூரில் 2,081 பேரும் தேர்வெழுதினர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
ஒசூரில்...
ஒசூர் வட்டத்தில் தேர்வு நடைபெறும் 34 மையங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. ஒசூர் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை உதவி ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.