விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமும் நாட்டு மக்களுக்கு அவசியமற்றது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான டி.டி.வி.தினகரன்.
எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியது:
அரூர் வழியாகச் செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் விரும்பவில்லை. மக்களுக்காகத்தானே அரசு நலத் திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல. விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் எந்த திட்டமும், இந்த நாட்டு மக்களுக்கு தேவையில்லை. காவல் துறையினரை வைத்து, விவசாயிகளை மிரட்டி இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன.
இந்தியாவில் பிற மாநிலங்களில் ஏன் எட்டு வழிச்சாலைகள் அமைக்கப்படவில்லை? எட்டு வழிச்சாலை அமைந்தால் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதில் உண்மையில்லை. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றால், பசுமை வழிச்சாலை செல்லும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பொதுமக்களை நேரில் சந்தித்து, விவசாயிகளிடம் கலந்து பேசி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாமல், மக்களை அச்சுறுத்துவது ஏன்?
மக்கள் விரும்பாத எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு மாற்றாக சென்னையில் இருந்து பெங்களூரு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலைகளை விரிவுபடுத்தி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம்.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. மாநில அரசின் அனைத்து செயல்பாடுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறும்.
அமமுகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வழக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலரும் என்றார்.
பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கர்நாடக மாநில செயலர் புகழேந்தி, கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, கட்சியின் மாவட்டச் செயலர்கள் டி.கே.ராஜேந்திரன் (தருமபுரி), எஸ்.கே செல்வம் (சேலம் புறநகர்), எஸ்.இ.வெங்கடாசலம் (சேலம் மாநகர்), ஜி.ரவிச்சந்திரன் (கிருஷ்ணகிரி கிழக்கு), கே.மாதேவா (கிருஷ்ணகிரி மேற்கு), கே.கே.மாதேஸ்வரன் (சேலம் மேற்கு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இனி அண்ணாமலை vs விஜய்! பாஜகவிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி விலகல்!

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி: 3 பேர் கைது!

மகன் மனோஜ்! பாரதிராஜாவின் நிறைவேறாத ஒரே ஆசை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


