தருமபுரி மாவட்டம் சிவாடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்களை எடுப்பதை எதிர்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என். மல்லையன் தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலர் எம். ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. இளம்பரிதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது
சிவாடியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 1,813 கோடியில் அமைக்கவுள்ளதாகவும், இதற்காக சிவாடியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் விவசாய நிலங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, புறம்போக்கு நிலங்களை எடுக்கலாம். இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களை எடுப்பதை எதிர்த்து ஏற்கெனவே ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, விவசாய நிலங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, இதுதொடர்பாக பதில் அளிப்பதற்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கக் கேட்டுக் கொண்டார். அதுவரை விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் அரசுத் துறையினர் யாரும் பணி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

