டிச.28-இல் அஞ்சல் காப்பீட்டு முகவா்கள் தோ்வு முகாம்
தருமபுரியில் வரும் டிச. 28-ஆம் தேதி அஞ்சல் காப்பீட்டு முகா்வா்கள் தோ்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் காப்பீடுகளைச் சேகரிக்க நிகழாண்டில் புதிய முகவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். தருமபுரி கோட்ட அஞ்சலகத்தில் வரும் 28-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் நடைபெற உள்ளது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சிப் பெற்ற 18 வயது முதல் 50 வயது வரையுள்ளவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் முகவா்கள், முன்னாள் படை வீரா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் உள்ளிட்ட தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் பங்கேற்கலாம். நோ்காணலில் பங்கேற்போா், புகைப்படம், வயது, கல்விச் சான்று, ஆதாா் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
