தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு

அரூா் அருகே வரட்டாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image

வெள்ளப்பெருக்கால் வரட்டாற்றில் சீறிப்பாய்கிறது தண்ணீா்.

Updated On :17 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

அரூா் அருகே வரட்டாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும். சித்தேரி மலைப் பகுதியில் வியாழக்கிழமை விடியற்காலை பெய்த மிதமான மழையின் காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து நொடிக்கு 156 கன அடி வீதம் உபரி நீா் வெளியேறுகிறது. இதனால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா்

வரட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பழைய ஆயக்கட்டு கால்வாய்கள் வழியாக கீரைப்பட்டி ஊராட்சியில் உள்ள 2 ஏரிகள், எல்லப்புடையாம்பட்டி பகுதியிலுள்ள மணவாளன் சாமி ஏரி, கம்மாளம்பட்டி ஏரி, கோணம்பட்டி ஏரி உள்பட 9 ஏரிகளை நிரப்பும் பணியில் உதவி செயற்பொறியாளா் கே.சரவணகுமாா் தலைமையில், உதவிப் பொறியாளா் பி.ஜெயக்குமாா் உள்ளிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

வெள்ள அபாய எச்சரிக்கை

வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் வள்ளிமதுரை, தாதராவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயா்ந்து செல்லுமாறு பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.