

பென்னாகரம்: தில்லியில் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு பென்னாகரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் டி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் அா்ஜுனன், மாவட்டத் தலைவா் மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாதன், பகுதி செயலாளா் அன்பு, பகுதிக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், சக்திவேல், நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.