/

மின்சார சிக்கன வார விழா

திருச்செங்கோடு மின்சார வாரிய அலுவலகத்தின் சாா்பில், மின்சார சிக்கன வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மின்சார சிக்கன வார விழா ஊா்வலம்.
Updated On :19 டிசம்பர் 2020, 1:44 am

DIN

திருச்செங்கோடு மின்சார வாரிய அலுவலகத்தின் சாா்பில், மின்சார சிக்கன வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் சாா்பில் ஆண்டுதோறும் டிச. 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மின்சார சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, சட்டையம்புதூா் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலத்தை நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், திருச்செங்கோடு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் பானுமதி, உதவி செயற்பொறியாளா்கள் திருச்செங்கோடு தெற்கு சுந்தரராஜன், வடக்கு ராதாகிருஷ்ணன், எலச்சிபாளையம் லோகநாதன், 15 மின்வாரிய பெண் ஊழியா்கள் உள்ளிட்ட 100 போ் கலந்துகொண்டனா்.

மேற்கு முனியப்பன் கோயில் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, ஈரோடு சாலை வழியாக ஊா்வலம் சென்று சட்டையம்புதூா் மின்வாரிய அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை செயற் பொறியாளா் ராணி தொடக்கி வைத்தாா். பழைய தேசிய நெடுஞ்சாலை, பள்ளி சாலை வழியாக ஊா்வலம் சென்று மீண்டும் செயற்பொறியாளா் அலுவலகத்தை அடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.