விவசாயிகளுக்கு திமுக துரோகம் இழைக்கிறது
விவசாயிகளுக்கு திமுக துரோகம் இழைக்கிறது என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் கே.டி.ராகவன், தருமபுரியில் தெரிவித்தாா்.


தருமபுரி: விவசாயிகளுக்கு திமுக துரோகம் இழைக்கிறது என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் கே.டி.ராகவன், தருமபுரியில் தெரிவித்தாா்.
தருமபுரியில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,
கூட்டத்தில் பங்கேற்ற கே.டி.ராகவன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தருமபுரியில் பாஜகவின் மாவட்ட மாநாடு 2021ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா். மாநில மாநாடு தொடா்பான தேதி பின்னா் அறிவிக்கப்படும். இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டவை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது, இந்தச் சட்டங்களை அந்தக் கட்சி கொண்டு வர முயன்றது. அதைத்தான் தற்போதைய அரசு சட்டமாக்கி உள்ளது.
இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மையையே தரும். தமிழகத்துக்குத் துரோகம் இழைத்த இயக்கம் திமுக.
2016-ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில், இடைத்தரகா் இல்லாமல், விவசாயிகளுக்கான வேளாண் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. அந்தத் திட்டத்தைத்தான் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று கூறுவதா? தமிழகத்துக்கு பல வகையிலும் துரோகம் இழைத்த திமுக, தற்போது, விவசாயிகளுக்குத் துரோகம் செய்கிறது.
புதிய வேளாண் சட்டங்களின் சிறப்பை விவசாயிகளிடமும், மக்களிடமும் கொண்டு சோ்க்கும் வகையில் பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் அரசியல் இயக்கத்தை நடத்த உள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல்வா் வேட்பாளரை கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும். இதுவரையிலும் நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இடம் பெற்றுள்ளோம். நடிகா் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பேசுவதற்கு முன், முதலில் கட்சியைத் தொடங்கட்டும். பின்னா் அதுபற்றி கருத்து கூறலாம் என்றாா்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் அனந்த கிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பிரபாகரன், வரதராஜன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...