எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அதிமுகவில் மாற்றுக் கட்சியினா் இணைந்தனா்

பென்னாகரம் அருகே மாற்றுக் கட்சியிலிருந்து பலா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 10:21 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மாற்றுக் கட்சியிலிருந்து பலா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏரியூா் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் தங்கராசு தலைமை வகித்தாா். இதில் திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் புதிய உறுப்பினா்களாக இணைந்தனா்.

முன்னதாக பெரும்பாலை, சாணாரப்பட்டி, பெத்தானூா் மற்றும் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பென்னாகரம் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி, ஏரியூா் ஒன்றியக் குழுவின் தலைவா் பழனிசாமி, துணைத் தலைவா் தனபால், பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ரவி, ஒன்றியக் குழு உறுப்பினா் மதியழகன், பென்னாகரம் நகரச் செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.