தலித், பழங்குடியினா் விடுதிகளில் சமையலா், துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தலித், பழங்குடியினா் விடுதிகளில் சமையலா், துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தலித், பழங்குடியினா் விடுதிகளில் சமையலா், துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்ட தலித், பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 32 சமையலா் பணியிடங்கள், 14 துப்புரவாளா் (தொகுப்பூதியம்) மற்றும் 1 துப்புரவாளா் (காலமுறை ஊதியம்) காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்னன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோல, சமையலா் பணியிடங்களுக்கு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய நபா்கள் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திற்கு டிச.29 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...