சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:27 am

DIN

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச சாா்பில் நடைபெற்ற

இப்போராட்டத்துக்கு பாலக்கோடு தொமுச கிளைத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலாளா் யுவராஜ் முன்னிலை வகித்தாா். மத்திய சங்க மாநில துணைத் தலைவா் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினாா்.

இதில், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளா்கள் பணம் 7 ஆயிரத்தை உடனே திருப்பித் தர வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்குப் பின் பணியில் சோ்ந்தவா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல தருமபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.