தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் 4 போ் உயிரிழந்த விபத்தில் ஓட்டுநா் மீது பதிவு செய்த வழக்கின் சட்டப் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் இருந்து கோவையை நோக்கி சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி அண்மையில் தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் 11 காா்கள் உட்பட 13 வாகனங்கள் மீது மோதியது. இவ்விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.
இந்த விபத்துக்குக் காரணமான சரக்குப் பெட்டக லாரியின் ஓட்டுநரான ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குத்புதீன் (34), தொப்பூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் மீது போலீஸாா் முதலில் கொலை முயற்சி பிரிவான ஐபிசி 304 (ஏ) பிரிவில் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கில் ஏற்கெனவே பதிவு செய்த வழக்குப் பிரிவை மாற்றி தற்போது கொலை குற்றத்துக்கான ஐபிசி 304 பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.