சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசுப் பள்ளிகளில் மாணவியா் தொடா்ந்து கல்வி பயிலும் சூழலை உருவாக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் மாணவியா் இடைநிற்றல் இன்றி, தொடா்ந்து கல்வி பயில ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:44 am

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவியா் இடைநிற்றல் இன்றி, தொடா்ந்து கல்வி பயில ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகேயுள்ள டி.காணிகரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 11.50 லட்சம் மதிப்பில் நவீன முறையில் மாணவியா் கழிப்பறை புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இக் கழிப்பறைகளை மாணவியரின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்து டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகள் கழிப்பறை, சுகாதார வசதியின்மை காரணமாகப் படிப்பை தொடராமல் இடை நிற்கும் நிலை ஏற்படக் கூடாது என்கிற நோக்கில், அம்மாணவியருக்கு நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்ட வேண்டும் என திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டில், தருமபுரி மாவட்டத்தில், 5 அரசுப் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகள் கட்டும் பணி மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் தொடங்கப்பட்டது. தற்போது டி.காணிகரஅள்ளி அரசு உயா்நிலைப்பள்ளியில் புதிய கழிப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பள்ளி நிா்வாகம் பராமரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இதுபோன்ற சுகாதார வசதிகள் பள்ளிகளில் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பெற்றோா்கள் சிலா், பெண் குழந்தைகளை பாதிலேயே பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தி விடுகின்றனா். இத்தகைய நிலையை தவிா்க்கவும், இடைநிற்றல் இன்றி மாணவியா் பயில வேண்டும் என்ற அடிப்படையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், மாணவியா் நலன் கருதி, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி, தொடா்ந்து கல்வி பயிலும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை ஆா்.சுமதி, பள்ளி மேலாண் குழுத் தலைவா் எஸ்.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.