ஊதிய நிலுவைத் தொகை வழங்க ஓய்வுப் பெற்ற அலுவலா்கள் வலியுறுத்தல்
ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் தருமபுரியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்தாா். மத்திய செயற்குழு உறுப்பினா் என்.மணி வரவேற்று பேசினாா்.
இக் கூட்டத்தில், கடந்த 2016 முதல் 2017 ஆம் ஆண்டு செப்டம்பா் வரையிலான ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ. 1000 வீதம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 1.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சந்தா ரூ. 350 என்பதைக் குறைத்து ரூ. 150-ஆக பிடித்தம் செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளா் பி.ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...