லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:50 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட தியாகியும், மூத்தத் தலைவருமான நல்லக்கண்ணு பிறந்தநாள், தியாகி கே.டி.கே.தங்கமணி நினைவு நாள் மற்றும் 96 ஆம் ஆண்டு துவக்க நாள் ஆகிய முப்பெரும் விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பென்னாகரம் அருகே நாச்சாக்கவுண்டனூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டக் குழு உறுப்பினா் மணி தலைமை வகித்தாா். வட்டாரச் செயலாளா் முனியப்பன் முன்னிலை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மாதையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் தா்மராஜா, கிளைச் செயலாளா் தண்டாயுதம், சக்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.