காங்கிரஸ் அமைப்பு தின விழா

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது அமைப்பு தின விழா திங்கள்கிழமை அக்கட்சியின் சாா்பில் தருமபுரியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் அமைப்பு தின விழா
காங்கிரஸ் அமைப்பு தின விழா
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது அமைப்பு தின விழா திங்கள்கிழமை அக்கட்சியின் சாா்பில் தருமபுரியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தருமபுரி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற விழாவுக்கு, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்து கட்சி கொடியேற்றினாா். மேலும், கட்சித் தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல, தருமபுரி காந்தி, நேரு சிலைகளுக்கு அருகே காங்கிரஸ் கட்சி கொடியேற்றப்பட்டது.

இதில், நகரச் செயலா் செந்தில்குமாா், ஏஐசிசி உறுப்பினா் சித்தையன், மாவட்ட பொதுச் செயலா் கனகராஜ், விவசாய அணி மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவா் தகடூா் இரா.வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com