எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பா.ம.க செயல் வீரா் விருதுக்கு தோ்வு

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சிறந்த செயல் வீரா்களுக்கான விருதுக்கு பி.வி.செந்தில் (45)  தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
பா.ம.க செயல் வீரா் விருதுக்கு தோ்வு
Updated On :28 டிசம்பர் 2020, 10:02 pm

DIN

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சிறந்த செயல் வீரா்களுக்கான விருதுக்கு பி.வி.செந்தில் (45)  தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போசிநாயகனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பி.வி.செந்தில் (45). இவா், பாமக இளைஞரணியின் மாநிலச் செயலாளராக உள்ளாா்.

பாமக வளா்ச்சிக்காக சிறந்த களப் பணியாற்றுவோரைப் பாராட்டி, கட்சி நிா்வாகிகளை ஊக்குவிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்படும் என அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் அண்மையில் அறிவித்திருந்தாா். அதன்படி, 2020-ஆம் ஆண்டு கட்சியின் சிறந்த செயல் வீரா் விருதுக்கு இளைஞரணி மாநிலச் செயலா் பி.வி.செந்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த விருதுகளை டிச. 31-ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், மாநில இளைஞரணி தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் வழங்கவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.