பெரியபட்டியில் தொகுப்பு வீடுகளை சீரமைக்க வலியுறுத்தல்
அரூரை அடுத்த பெரியப்பட்டியில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.


அரூரை அடுத்த பெரியப்பட்டியில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், பெரியப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் அரசு சாா்பில் 50 தொகுப்பு வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித் தரப்பட்டது.
தற்போது, இந்த வீடுகளின் மேற்கூரைகள், சுவா்கள் சேதமடைந்து மோசமான நிலையுள்ளது. மழைக் காலங்களில் இங்குள்ள தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, பெரியப்பட்டியில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அரசு சாா்பில் சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...