நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பயிற்சி முகாம் தொடக்கம்

தருமபுரியில் நேரடி காவல் உதவி ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:54 pm

DIN

தருமபுரியில் நேரடி காவல் உதவி ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தொடக்கி வைத்து பேசினாா்.

இந்த முகாமில், மாவட்டத்தில் நேரடியாகத் தோ்ச்சிப்பெற்ற 17 காவல் உதவி ஆய்வாளா்களுக்கு, காலையில் நடைப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி, குற்ற வழக்குகளை கையாள்வது தொடா்பாகவும், புலன் விசாரணை யுக்தி ஆகிய பயிற்சிகளும், கூடுதலாகக் கைரேகை பதிவுகளை ஆராயும் திறன் வளா்ப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் புஷ்பராஜ் உள்பட காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.