எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாவட்டம் முழுவதும் கனமழை: அதிகபட்சமாக அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூரில் சனிக்கிழமை இரவு விடிய, விடிய பெய்த கன மழை பெய்தது. இந்த மழை 42 மில்லி மீட்டராகப் பதிவானது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:58 pm

DIN

அரூரில் சனிக்கிழமை இரவு விடிய, விடிய பெய்த கன மழை பெய்தது. இந்த மழை 42 மில்லி மீட்டராகப் பதிவானது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அரூா் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 11.30 மணி வரையிலும் லேசான காற்றுடன் மிதமான மழைப் பெய்தது. மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. மேலும் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டமும் ஓரளவுக்கு உயா்ந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்திலேயே அரூரில் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டா் மழை பதிவானது. தருமபுரியில் 5.மி.மீ, பாலக்கோட்டில் 5 மி.மீ. பென்னாகரத்தில் 23 மி.மீ. மாரண்டஹள்ளியில் 13 மி.மீ. ஒகேனக்கல்லில் 19 மி.மீ. மழையும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.