மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவிரி கரையோரப் பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 45,000 ஆயிரம் கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

News image
காவிரி கரையோரப் பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
Updated On :20 செப்டம்பர் 2020, 10:01 pm

DIN

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 45,000 ஆயிரம் கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், மண்டியா, சாம்ராஜ்நகா், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் கிருஷ்ணராஜ சாகா் அணையில் இருந்து நொடிக்கு 10,668 கன அடி நீா், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீா் என மொத்தம் 45, 668 கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், இரு அணைகளுக்கு வரும் உபரி நீா் முழுவதையும் காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனா்.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி உத்தரவின் பேரில் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளான ஊட்டமலை, ஆலாம்பாடி, சத்திரம் மற்றும் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒகேனக்கல் அரசு தொடக்ககப் பள்ளி, ஊட்டமலை அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் வருவாய்த் துறையினா் முகாம் ஏற்பாடு செய்துள்ளனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தானது நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்து வருகிறது. மேலும் கா்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை காலை அல்லது மாலையில் தமிழகம் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.