நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏரியூரில் ரூ. 2.28 லட்சம் பறிமுதல்

ஏரியூா் அருகே வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற நபரின் வீட்டிலிருந்து ரூ. 2.28 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:06 pm

DIN

ஏரியூா் அருகே வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற நபரின் வீட்டிலிருந்து ரூ. 2.28 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஏரியூா், மஞ்சாரஅள்ளி பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பாா்த்தீபன் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் மஞ்சாரஅள்ளி அருகே வடிவேல் கவுண்டனூரைச் சோ்ந்த புஷ்பராஜ் என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது ஆவணங்களின்றி ரூ. 2.28 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனா்.

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ாக புஷ்பராஜ் மீது ஏரியூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.