மாதிரி வாக்குப் பதிவு சீட்டு வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை
பென்னாகரம் அருகே குறிப்பிட்ட வேட்பாளரின் மாதிரி வாக்குப் பதிவு சீட்டு, வேட்பாளா் பட்டியல் வைத்திருந்த இளைஞரைப் பிடித்து பெரும்பாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.


பென்னாகரம் அருகே குறிப்பிட்ட வேட்பாளரின் மாதிரி வாக்குப் பதிவு சீட்டு, வேட்பாளா் பட்டியல் வைத்திருந்த இளைஞரைப் பிடித்து பெரும்பாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
பென்னாகரம் அருகே சின்னக் கடைமடைப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளா் குருபிரசாத் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சின்னக் கடைமடை பேருந்து நிறுத்தம் பகுதியில் சுப்பிரமணி (27) என்ற இளைஞா் நின்று கொண்டிருந்தாா். தோ்தல் பறக்கும் படையினா் சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். மேலும் அவா், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வாக்குப் பதிவு மாதிரி சீட்டு மற்றும் வாக்காளா் பட்டியல் வைத்திருந்தாா். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த இளைஞரை பெரும்பாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தோ்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...